Top Ad unit 728 × 90

சுரண்டையில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம

மே-5,நெல்லை மாவட்டம். சுரண்டை
  இன்று திருநெல்வேலி மாவட்டம் சுரண்டையில் சமூக ஆர்வலர்கள் நடத்திய *டெங்கு விழிப்புணர்வு வீடுகள் தோரும் பிரச்சாரம்* நடை பெற்றது.  இதில் சுரண்டை பேரூராட்சி செயல் அலுவலர் திரு.காளியப்பன் அவர்கள்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு.இசக்கியப்பா மற்றும் குற்றாலம் பேரூராட்சி SO அவர்கள் மற்றும் கீழசுரண்டை அக்னிசிறகுகள் பசுமை  சுமோ முருகன் NFS ட்ரஸ்ட் நண்பர்கள் மற்றும் மன்னா அறக்கட்டளை நண்பர்கள் கலந்து கொண்டு சுரண்டை மக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு மற்றும் அனைத்து வீடுகளிலும் தண்ணீர் தொட்டிகளை பேரூராட்சி ஊழியர்கள் மூலம் சொதனை செய்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சமூக ஆர்வலர்களும் பேருராட்சி பெண்களும் தங்களது பணிகளை மிக சிறப்பாக மேற்கொண்டனர்.

அடுத்து பத்து நாட்களுக்கு தொடர்ந்து  போது மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை பேருராட்சியுடன் இணைந்து எப்படி மேற்கொள்ளுவது என்று திட்டமிடப்பட்டது. மருத்துவமனை பகுதிகளை மற்றும் பொது இடங்களையும்  தொடர்ந்து கண்கானிக்கவும்  முடிவு செய்யப்பட்டது.

சுரண்டையில் டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம Reviewed by Manna Selvakumar on 04:40 Rating: 5
All Rights Reserved by சுரண்டை டைம்ஸ் ©
Designed by Theme in Box

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.