Top Ad unit 728 × 90

இந்திய ரூபாய் மதிப்பு அபார உயர்வு

*இந்திய ரூபாய் மதிப்பு அபார உயர்வு*

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்துள்ளது. வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை சரிந்துள்ளது முக்கியக் காரணம். இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.64.00. கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.64.24.

*ஓடும் ரயிலிலிருந்து பயணியை தள்ளிவிட்ட டி.டி.ஆர்.*

திருப்பதி-கோலார் ஹரிப்ரியா எக்ஸ்ப்ரஸ் ரயிலில் சம்பவம். இருக்கை ஒதுக்குவது தொடர்பாக ஒரு பயணிக்கும், டிக்கெட் பரிசோதகருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அப்பயணியை திடீரென ரயிலை விட்டுக் கீழே தள்ளிவிட்டார் டிக்கெட் பரிசோதகர். படுகாயமடைந்த அப்பயணிக்குத் தீவிர சிகிச்சை

*சேலம், மதுரையில் நகைகள் துணிகர கொள்ளை*

சேலத்தில் பெண் இரும்பு வியாபாரியின் வீட்டிலிருந்து 720 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. திருடிய பின் அங்கு பில்லி-சூனியம் வைத்து விட்டும் திருடர்கள் சென்றுள்ளனர். இதற்கிடையே, மதுரை கோமதிபுரத்திலும் பூட்டிய வீட்டை உடைத்து 80 பவுன் நகைகளை கொள்ளையர்கள் அள்ளிச் சென்றுள்ளனர்

*ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தைகள்*

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று பங்கு வர்த்தகம் உயர்வுடன் தொடங்கியுள்ளது. இன்று காலை 9.45 மணி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 110.28 புள்ளிகள் அதிகரித்து 30,028.70. தேசிய பங்குச் சந்தை (நிஃப்டி) 36.10 புள்ளிகள் உயர்ந்து 9,340.20.

*இஸ்ரேல் விழாவில் ஜோதி ஏற்றிய பார்வையற்ற இந்திய இளைஞர்*

இஸ்ரேல் நாட்டின் 69வது சுதந்தர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், பார்வையற்ற இந்திய இளைஞர் டினா சிமாடா, சுதந்தர தின ஜோதியை ஏற்றினார். ஜெருசலேமில் உள்ள ஒரு பார்வையற்றோர் பள்ளியில் பயின்று வருகிறார் சிமாடா

*அக்னி நட்சத்திரம் நாளை மறுநாள் தொடக்கம்*

கோடைகாலத்தின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் வரும் 4ம் தேதி தொடங்குகிறது. வரும் 28ம் தேதி வரை நீடிக்க உள்ளது இந்தக் கத்தரி வெயில். ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், அக்னி நட்சத்திரத்தின்போது வெப்பம் மேலும் அதிகரிக்கும்

*அனந்தநாக் இடைத்தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு*

வரும் 25ம் தேதி நடக்கவிருந்த காஷ்மீரின் அனந்தநாக் மக்களவை இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 12ல் நடக்கவிருந்த இந்த இடைத்தேர்தல் ஏற்கனவே ஒருமுறை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

*

இந்திய ரூபாய் மதிப்பு அபார உயர்வு Reviewed by Manna Selvakumar on 00:22 Rating: 5
All Rights Reserved by சுரண்டை டைம்ஸ் ©
Designed by Theme in Box

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.