Top Ad unit 728 × 90

மாலை தலைப்புச் செய்திகள்

*மாலை தலைப்புச் செய்திகள்*
🌼➖➖➖➖➖➖➖➖➖🌼

அ.தி.மு.க.வில் ஏற்கனவே உள்ள இரு அணிகளையும் இணைக்கும் முயற்சி இழுபறியில் உள்ள நிலையில், தற்போது 3-வது அணியாக சசிகலா ஆதரவாளர்களை நாஞ்சில் சம்பத் திரட்டி வருகிறார்.

விஜய் மல்லையா வருகின்ற ஜூலை 10-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசு, உள்துறை அமைச்சகத்துக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய பாராளுமன்ற அவைக்குள் பெண் உறுப்பினர் ஒருவர் தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டியதன் மூலம் பாராளுமன்ற வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இந்தியாவில் முதன்முறை திருநங்கை பொறியியல் பட்டதாரி என்ற வகையில் சிறப்பிடம் பிடித்துள்ள திருநங்கை கிரேஸ் பானுவுக்கு தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பின் சார்பில் "இளம் சாதனை திருநங்கை -2017" என்ற விருது அளிக்கப்பட்டது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு செல்போனில் குறுந்தகவல் மூலம் தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி ரோகோஜின் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள அணு உலையில் அணுக்கழிவுகளை சேமித்து வைக்கும் கொள்கலன் பகுதியில் சுரங்கத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்ததால் அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

ஹிலாரி கிளிண்டன் பிரசார இ-மெயில் வெளியான விவகாரத்தில் அமெரிக்க புலனாய்வுதுறை இயக்குனர் ஜேம்ஸ் ‘கோமே’வை அதிபர் டொனால்டு டிரம்ப் பதவிநீக்கம் செய்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கானாசாக் போலீஸ் நிலையத்தில் பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச புத்தமத மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை இலங்கை செல்கிறார். தமிழர்கள் அதிகமாக வாழும் மத்திய மாகாணத்துக்கு செல்லும் அவர் அங்கு புதிய மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

கோவா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் போட்டியிடுவதற்கு வசதியாக பனாஜி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தென் கொரிய நாட்டின் புதிய அதிபராக பதவியேற்று கொண்ட மூன் ஜயே-இன், வடகொரியா செல்ல விரும்புவதாக பதவியேற்பு விழாவில் பேசினார்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய காளஹஸ்திக்கு மேற்கு வங்க தனிப்படை போலீசார் புறப்பட்டு சென்றனர். அங்கு வைத்து அவரை கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


வருமான வரித்துறை பட்டியலில் உள்ள ஊழல் அமைச்சர்களின் பெயர்களை உடனே வெளியிடவேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைர விழாவில் அனைத்துக் கட்சி தலைவர்கள், மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க. மதவாத கட்சி என்பதால் அதற்கு அழைப்பு இல்லை என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

முதல் முறையாக தமிழகத்தில் நீட் தேர்வு நடந்துள்ளது. இதற்கு அ.தி.மு.க. அரசு தான் காரணம் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

ஆசிரியை நிவேதா கொலை வழக்கில் கைதான தீயணைப்பு வீரர் இளையராஜா புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

பாகிஸ்தான் நாட்டில் கொலைவெறி தாக்குதல்களை நடத்திய தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்தை சேர்ந்த அதிபயங்கர தீவிரவாதிகள் 4 பேர் இன்று தூக்கிலிட்டு கொல்லப்பட்டனர்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் வருமானவரி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🌼➖➖➖➖➖➖➖➖➖🌼

மாலை தலைப்புச் செய்திகள் Reviewed by Manna Selvakumar on 06:59 Rating: 5
All Rights Reserved by சுரண்டை டைம்ஸ் ©
Designed by Theme in Box

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.