Top Ad unit 728 × 90

மதிய செய்திகள

💮 *NIP NEWS மதிய செய்திகள்*💮

✍ சென்னை: அதிமுக இரு அணிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறும் என பொன்னையன் பேட்டி அளித்துள்ளார்.

✍ கோவை: பாலக்காட்டில் கார் விபத்தில் காயமடைந்த சாயனிடம் மாஜிஸ்திரேட் வாக்கு மூலம் பெற்றார். கொடநாடு ஜெயலலிதா எஸ்டேட் காவலாளி கொலை, கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் சயான். கேரளாவின் திருச்சூரை சேர்ந்த சயான் பாலக்காடு அருகே நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.  திருடிய காரில் சயான் தப்பிச் செல்லும்போது, கார் டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சயானுடன் சென்ற மனைவி வினுப்பிரியா மற்றும் 5 வயது குழந்தை நீலு ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த சயான், பாலக்காடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்று வந்தார். பின்பு பாலக்காடு மருத்துவமனையில் இருந்து கோவை மருத்துவமனைக்கு சயான் கொண்டு வரப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சயான் போலீஸ் பாதுகாப்புடன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

✍ நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கெள்முதல் விலை 6 காசுகள் உயர்ந்து ரூ.3.24ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி குறைவு, காய்கறி விலையேற்றம் காரணமாக விலை உயர்ந்துள்ளது.

💢🌷 *NIP NEWS 24/7*🌷💢

✍ சென்னை :  மே 1ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பொன். வடிவேலு என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

✍ சென்னை: சென்னை திருவொற்றியூரில் நகை கொள்ளை வழக்கில் தாய், மகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாய் செந்தாமரை மற்றும் மகள் ஷாலினிக்கு திருவொற்றியூர் நீதிமன்றம் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 2015ம் ஆண்டு ஆதிலட்சுமி என்பவரிடம் 15 சவரன் நகையை கொள்ளையடித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

✍ சென்னை : வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை என தமிழக அரசுக்கு கூறியது கண்டிக்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் கூறுகிறார் என்றும் தற்கொலை நடக்கவில்லை என ஒருபுறமும், நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என மறுபுறமும்  கூறுவது, முரணாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

✍ திருச்சி: வரும் 4 ஆண்டுகள் பூர்த்தி செய்வதோடு அடுத்த 50 ஆண்டுகளுக்கு அதிமுகவே ஆட்சி செய்யும் என முசிறியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

💢🌷 *NIP NEWS 24/7*🌷💢

✍ நாகை : சீர்காழி அருகே திருவெண்காட்டில் 2 பேர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தியுள்ளனர். திருவலங்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அகோரம் ஆகியோர் டவர் மீது ஏறியுள்ளனர். திருவெண்காட்டில் அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

✍ சென்னை : தமிழகத்தில் பாசன வசதி பெறும் நீர் நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. களிமண்,வண்டல் மண்ணை அகற்ற தமிழ்நாடு சிறுகனிம விதி 12ல் திருத்தம் செய்யப்படும் என்று தமிழக அரசு  அறிவித்துள்ளது.தற்போதைய சட்டத் திருத்தங்களால் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் கூடுதல் சலுகை பெறக்கூடும் என்றும் தமிழக அரசு  அறிவித்துள்ளது.

✍ செங்கல்பட்டு: செம்பரம்பாக்கம் ஏரியில் மணல் அள்ளியதைத் தடுத்த வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியர் லட்சுமணனை மிரட்டிய மணல் கொள்ளையர் மணலுடன் 2 லாரிகளை ஓட்டிச் சென்றனர். வட்டாட்சியர் லட்சுமணன் அளித்த புகாரை அடுத்து மணல் கொள்ளையரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

✍ ஹைதராபாத்: சவூதி அரேபியாவிற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பரில் சென்ற பெண், சித்திரவதை செய்யப்பட்டதாகக் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. சவூதி அரேபியாவில் செவிலியராக வேலை பார்க்கும் என் தங்கை சித்திரவதை செய்யப்படுகிறாள் என போலீசாரிடம் கூறி அவளது அக்கா புகார் அளித்துள்ளார். இதனையடுத்து முதல்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவள் வீட்டு வேலைக்காரியாக பணியாற்றும்படி கட்டாயப்படுத்தப்படுகிறாள், அவளைத் தொடர்பு கொள்ள எங்களால் முடியவில்லை, என் சகோதரியை காப்பாற்ற வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்க்கு பாதிக்கப்பட்ட சகோதரி அஸிமா பேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

💢🌷 *NIP NEWS 24/7*🌷💢

✍ புதுச்சேரி: புதுச்சேரி கோயில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்படும் என ஆளுநர் கிரன் பேடி தெரிவித்துள்ளார். மேலும் கோயில் அறங்காவலர் செயல்பாடுகளை மதிப்பிட வேண்டியது அவசியம் என்றார்.

✍ நெல்லை: நெல்லை ரெட்டியார்பட்டியில் பால், வெண்ணெய் குளிர்விக்கும் அறையை அமைச்சர்கள் பாலாஜி, ராஜலட்சுமி ஆகியோர் திறந்து வைத்தனர். 

✍ மேலூர்: அரசு அலுவலகங்களுக்கென புதிதாக கட்டிடங்கள் கட்டிய பிறகும் அதற்கு மாறாமல் தொடர்ந்து வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வருவதால் அரசுக்குப் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மேலூர் நகரில் நூலகம் கடந்த 50 ஆண்டுங்களுக்கு முன் துவக்கப்பட்டது. துவங்கிய காலம் முதல் மேலூர் செக்கடியில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது இந்த நூலகம். இட நெருக்கடி மிகுந்த இடமாக செக்கடி பகுதிக்கு மாறியதால் நூலகத்தை காலி செய்யும்படி அக்கட்டிடத்தின் உரிமையாளர் 10 ஆண்டுகளுக்கு முன் கூறினார். வேறு இடம் கிடைக்காததால் அதே இடத்தில் போதிய வசதியின்றி நூலகம் இன்று வரை இயங்கி வருகிறது.புதிய நூலகம் கட்டுவதற்காக பல முறை நிதி ஒதுக்கப்பட்டும் நகருக்குள் இடம் கிடைக்காமல் நிதி திருப்பி அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் மேலூர் சிவன் கோயில் அருகில் கால்நடை துறைக்குச் சொந்தமான இடத்தில் நூலகம் கட்டி முடிக்கப்பட்டது. நூலகக் கட்டிடத்தை கட்டி முடித்த நகராட்சி நிர்வாகம் அதன் அருகில் சிறிது இடம் காலியாக இருப்பதை கண்டு அவ்விடத்தில் பொதுக்கழிவறையை கட்டிவிட்டது. நூலகம் கட்டி முடித்து இவ்வளவு நாட்கள் ஆகியும் இது வரை அதை திறக்காமல், வாடகை கட்டிடத்திலேயே இன்னுமும் இயங்கி வருகிறது. புதிதாக கட்டிய அந்த கழிவறையும் திறக்கப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இதேபோல் மேலூர் தாலுகாவிற்கு என தனி டிஎஸ்பி அந்தஸ்து கொடுத்த காலத்தில் இருந்து இது வரை வாடகை கட்டிடத்தில்தான் அலுவலகம் இயங்கி வருகிறது. குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு மாடியில் இட நெருக்கடியான நிலையில் தற்போது வரை வாடகை கட்டிடத்தில்தான் டிஎஸ்பி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மேலூர் நகராட்சிக்குட்பட்ட மலம்பட்டி பகுதியில் டிஎஸ்பி அலுவலகம், மற்றும் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இது வரை ஏனோ அங்கு அலுவலகத்தை மாற்ற எந்த முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.பல லட்சம் செலவில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இருந்தும் அவ்விடத்திற்கு மாறுவதற்கு எது தடுக்கிறது என அவர்களுக்கே வெளிச்சம். மக்களின் வரிப்பணம் தேவையற்ற வகையில் வாடகைப் பணமாகச் செல்வதைத் தடுத்து, புதிய கட்டிடங்களுக்கு அரசு அலுவலகங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

💢🌷 *NIP NEWS 24/7*🌷💢

✍ தேனி: தேனி மாவட்டத்தில் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் கண்மாய்கள் ஆளும் கட்சியினரின் ஆக்கிரமிப்பில் சிக்கி வறண்டு போயுள்ளன.தேனி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். இங்குள்ள முல்லைப்பெரியாறு, வைகையாறு, சோத்துப்பாறை, மஞ்சளாறு, சண்முகாநதி அணைகள் மூலமாக விவசாயம் பெருமளவில் நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு வடிநில கோட்டத்தின் கீழ் சுமார் 94 முறைசார் கண்மாய்கள் பரமரிக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய கண்மாய்களில் பெரும்பாலானவை தூர்வாறப்படாமலும், ஆளும் அதிகாரவர்க்கத்தினரின் ஆக்கிரமிப்பிலும் கால்வாய்களில் வரும் நீரை முழுமையாக சேமிக்கமுடியாமல் வறண்டு போயுள்ளது. பெரியகுளத்தில் கீழப்புரவு, நடுப்புரவு, மேலப்புரவு என மூன்று புரவுகளில் வராகஆறு, கல்லார், பாம்பார் ஆறுகளை நீராதாரமாக கொண்டு 36 கண்மாய்கள் உள்ளன. இதில் வேளாண்குளம் கண்மாய், போடாங்குளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்கள் முழுமையாக ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது.  தேனி அருகே போடேந்திரபுரம் கண்மாய் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி கண்மாய் இருந்த அடையாளமே இல்லாமல் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, கண்மாய் இருந்த இடம் தனியாருக்கு பட்டா போட்டு தாரைவார்த்தது தெரியவந்துள்ளது. இக்கண்மாய் தாரைவார்த்ததன் மூலமாக சுமார் 100 ஏக்கர் நிலம் பாசன வசதி இழந்துள்ளது. கண்மாய் நிலை குறித்து வேளாண்குளம் விவசாய சங்கத் தலைவர் பரமசிவம் கூறியதாவது: அதிகாரிகள் கண்மாயை தூர்வாற முன்வருவதில்லை. தூர்வாருவதாக சொன்னாலும் முறைப்படி தூர்வாராமல் ஆங்காங்கே பெயரளவிற்கு பள்ளம் தோண்டிவிட்டு கணக்கு காட்டுகின்றனர். இதனால் எவ்வித பலனும் ஏற்படபோவதில்லை. கண்மாயை தூர்வாரிட பாசன விவசாயிகளிடம் கொடுத்தால் சட்டப்படியாக கனிமவளத்துறை அனுமதி பெற்று விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு கண்மாய்களில் இருந்து மண்ணை அள்ளிச் செல்ல அனுமதிக்கப்படுவதன் மூலம் கண்மாய்கள் இலவசமாகவே தூர்வாரப்படும். இதன்மூலம் கண்மாய்களில் மீன்பாசி ஏலம் விட்டும் பொதுப்பணித்துறை வருவாய் ஈட்டலாம். மழைகாலங்களில் கால்வாய்களில் வரும் நீர் முழுமையாக தேக்கி வைக்கப்படும்’ என்றார்.

✍ வேலூர்: வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்து விதிமீறல்களால் நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் கொளுத்தும் வெயிலில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பரிதவிப்புக்கு ஆளாகினர். வேலூர்-ஆற்காடு சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இதனால், இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அதிகப்படியான வாகனங்கள் வந்து செல்வதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேலூர்ஆற்காடு சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. இதற்காக, வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோயில் அருகிலும் பேலஸ்கபே அருகிலும் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டது. ஆனால், இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடாததால் அங்குள்ள இரும்பு தடுப்புகளை தள்ளிவிட்டு வேலூர்ஆற்காடு சாலையை இருவழிச்சாலையாக வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட அதில் சிக்கி தவிக்கின்றன. இந்நிலையில், நேற்று மதியம் 1.30 மணியளவில் வேலூர்ஆற்காடு சாலையின் இருபுறமும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தொடங்கின. மேலும் விதிமுறைகளை மீறி சாலையின் இடது பக்கம் செல்ல வேண்டிய வாகனங்கள் வலது பக்கமும் ஆக்கிரமித்து நின்றன.இதனால், அனைத்து வாகனங்களும் நெரிசலில் சிக்கி போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்கு மேல் ஸ்தம்பித்தது. கொளுத்தும் வெயிலில் வாகன ஓட்டிகள் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவதிக்கு ஆளாகினர். ஆனால், கடைசி வரை போக்குவரத்தை சரி ெசய்ய போலீசார் யாரும் வரவில்லை. ஒரு வழியாக வாகன ஓட்டிகளில் சிலர் ரோட்டில் இறங்கி போக்குவரத்தை சீரமைத்தனர். அடிக்கடி நடக்கும் இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

💢🌷 *NIP NEWS 24/7*🌷💢

✍ காளையார்கோவில்: காளையார்கோவிலில் பஸ் நிலையத்தின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. காளையார்கோவிலில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கேற்ப பஸ்நிலையம் இல்லலாதால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. காளையார் கோவில் தாலுகாவிற்குட்பட்ட 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர் விசேஷ காலங்களில் சொர்ண காளீஸ்வரர் கோயிலுக்கு 500க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் காரைக்குடி, தொண்டி, பரமக்குடி, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் அதிகளவில் வந்த செல்லும் மையப் பகுதியாகும். இதனால் திருவிழா காலங்கள் மற்றும் பள்ளிகள் விடுமுறை காலங்களில் அதிகளவில் கூட்டம் இருக்கும்.கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காளையார்கோவில் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று நெடுஞ்சாலைத் துறையினர் அறிவித்தது. ஆனால் இன்று வரை ஆக்கிரமிப்புகளைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் இருவழிச்சாலை ஒருவழிச்சாலையாக மாறி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சில ஆண்டுகளுக்கு முன் நடைபாதையாகவும், மழைநீர் வடிகாலாகவும் அமைக்கப்பட்டது. தற்போது வடிகால் இருக்குமிடம் தெரியாத அளவிற்கு செட் அமைத்து பொருட்களை ரோடு வரையிலும் வைத்து விடுகின்றனர் இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. அதனால் ஆண்டுக்கு 50க்கும் மேற்பட்ட விபத்து ஏற்பட்டு வருகிறது.மாவட்டத்தில் சிவகங்கை நகராட்சிக்கு அடுத்து மக்கள் தொகை அதிகளவு கொண்டது காளையார்கோவில் ஊராட்சி ஆகும். இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்தறை அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் சரவணதிருக்குமரன் கூறுகையில்,‘‘ சிவகங்கை மற்றும் காரைக்குடி போன்ற பெரிய நகரங்களில் சில மாதங்களுக்கு முன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அதேபோல் காளையார்கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இருவழிச் சாலையாக உள்ள மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சலையை மில் கேட்டில் இருந்து சூசையப்பர்பட்டிணம் விலக்கு வரையிலும், ஒருவழிச்சாலையாக மாற்றினால் மட்டுமே விபத்துகளைத் தடுக்க முடியும். மேலும் மக்கள் தேவைக்கேற்ப புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும்’’ என்றனர்.காரைக்குடி: காரைக்குடியில் வியாழக்கிழமை தோறும் கழனிவாசல் சாலையில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதனால் எப்போதும் அதிகமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். 500 க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள், நூற்றுக்கணக்கான பழக்கடைகள் மற்றும் மீன் மார்க்கெட்டும் கூடுவது வழக்கம்.இச்சந்தைக்கு கழனிவாசல், பர்மாகாலனி, ஓ சிறுவயல், பேயன்பட்டி, பாண்டியன் நகர் போன்ற பகுதிகளில் உள்ள மக்களுக்கேற்ப இடமாக இருப்பதால் மற்ற சந்தைகளைவிட அதிகமான மக்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. பெரும்பாலும் இதே சாலையில் தான் மதுரை, பரமக்குடி, திருப்புத்தூர், தேவகோட்டை திருச்சி, ராமேஸ்வரம் போன்ற ஊர்களில் இருந்து பஸ் காரைக்குடி புதிய பஸ்நிலையத்துக்கு வந்து செல்கின்றன.சந்தைக்கு வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களையும், நான்கு சக்கர வாகனங்களையும் சாலை ஓரத்தில் நிறுத்துவதால் பெரும் இடையூராக உள்ளது. மேலும் பல நேரங்களில் விபத்து அபாயமும் உள்ளது. குறைந்த அளவே போலீசார் பாதுகாப்பு பணியில் அப்பகுயில் இருப்பதால் வாகன நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. பலமுறை வாகனங்களை சற்று தூரமாக நிறுத்த சொல்லியும் பொதுமக்கள் தங்கள் சவுகரியத்திற்க்காக சந்தையின் வாசலிலேயே நிறுத்தி செல்கின்றனர். அத்துடன் ஆட்டோக்களும் வாசலிலேயே அணிவகுத்து நிற்கின்றன. தள்ளுவண்டி கடைகளும் ஆங்காங்கே பல மீட்டர் தூரத்திற்க்கு வரிசையாக நிறுத்தி வியாபாரம் செய்வதாலும் அப்பகுதி பெரும் சாலை நெரிசலால் போர்க்களம் போல் காட்சி அழைக்கிறது. அவசரத்திற்கு 108 ஆம்புலன்ஸ் செல்ல வேண்டுமானாலும் கூட ஊர்ந்து செல்லும் நிலை தான் நீடிக்கிறது. காவல்துறை தக்க நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

✍ வேலூர்: வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்து விதிமீறல்களால் நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் கொளுத்தும் வெயிலில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பரிதவிப்புக்கு ஆளாகினர். வேலூர்-ஆற்காடு சாலையில் பிரபல தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இதனால், இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். அதிகப்படியான வாகனங்கள் வந்து செல்வதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேலூர்ஆற்காடு சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது. இதற்காக, வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோயில் அருகிலும் பேலஸ்கபே அருகிலும் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டது. ஆனால், இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடாததால் அங்குள்ள இரும்பு தடுப்புகளை தள்ளிவிட்டு வேலூர்ஆற்காடு சாலையை இருவழிச்சாலையாக வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அவசரகால ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட அதில் சிக்கி தவிக்கின்றன. இந்நிலையில், நேற்று மதியம் 1.30 மணியளவில் வேலூர்ஆற்காடு சாலையின் இருபுறமும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தொடங்கின. மேலும் விதிமுறைகளை மீறி சாலையின் இடது பக்கம் செல்ல வேண்டிய வாகனங்கள் வலது பக்கமும் ஆக்கிரமித்து நின்றன.இதனால், அனைத்து வாகனங்களும் நெரிசலில் சிக்கி போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்கு மேல் ஸ்தம்பித்தது. கொளுத்தும் வெயிலில் வாகன ஓட்டிகள் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவதிக்கு ஆளாகினர். ஆனால், கடைசி வரை போக்குவரத்தை சரி ெசய்ய போலீசார் யாரும் வரவில்லை. ஒரு வழியாக வாகன ஓட்டிகளில் சிலர் ரோட்டில் இறங்கி போக்குவரத்தை சீரமைத்தனர். அடிக்கடி நடக்கும் இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க காவல்துறை உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

✍ மானாமதுரை: மானாமதுரை வட்டாரத்தில் தெ.புதுக்கோட்டை, ஆலம்பச்சேரி, குறிச்சி, மேலநெட்டூர், கால்பிரவு, கீழமேல்குடி, இடைக்காட்டூர் உள்பட பல கிராமங்களில் 800 ஏக்கரில் வாழை நடவு செய்யப்படுகிறது. வாழை மரத்திற்கு மாதம் இரண்டு முறை தண்ணீர் தேவையான அளவு பாய்ச்சினால் 8 மாதத்தில் இலைகள் கிடைக்கும். அதனைப் பறித்து அதன் மூலம் முதல் வருமானத்தை பெறலாம். அதன்பின் பூ, வாழை தார்கள் குலை தள்ளி அவைகள் காயாகினால் ஆண்டு முழுவதும் பலன்தரும். ஏக்கருக்கு ரூ40 ஆயிரம் செலவு செய்தால் ரூ. 2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.ஆலம்பச்சேரியில் கடந்த 6 மாதங்களுக்கு முன் வாழைக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்தாண்டு பருவமழை பொய்த்துபோனதால் கண்மாய், குளங்களிலும் போதிய தண்ணீர் இல்லாததால் வாழை கன்றுகள் போதிய அளவு வளராமல் ஆரம்ப நிலையிலேயே உள்ளது. அதேபோல நிலத்தடி நீர்மட்டம் 300 அடிக்கு கீழே சென்று விட்டதால் தற்போது போர்வெல்களிலும் போதுமான தண்ணீர் இல்லாததால் மாதத்திற்கு ஓரு முறை கூட தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் குடிநீர் டேங்குகளில் பணம் கொடுத்து தண்ணீர் பெற்று வாழைகளை காப்பாற்றி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து விவசாயி வீரன் கூறுகையில்,” தற்போது வாழை கன்று வைத்து 8 மாதமாகப் போகிறது. தண்ணீர் பற்றாக்குறையினால் போதிய அளவு வளர்ச்சியில்லாமல் ஏராளமான கன்றுகள் ஆரம்ப நிலையிலேயே கருகி வருகின்றன.தற்போது இலை அறுக்கும் காலம் தாய்கன்றுகளுக்கு பக்கத்தில் துணைக்கன்றுகள் வளராமல் அப்படியே உள்ளது. ஏக்கருக்கு 40 ஆயிரம் செலவு செய்துள்ளேன். தண்ணீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்தால் ரூ.2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். மாதத்திற்கு ஒரு முறை கூட போதிய அளவு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. செடிகள் கருகிவருகின்றன. செலவழித்த ரூபாயை கூட எடுக்க முடியாத அளவிற்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது” என்றார்.

💢🌷 *NIP NEWS 24/7*🌷💢

✍ கமுதி: கமுதி அருகே உவர்நீரை நன்னீராக்கும் இயந்திரம் பழுதானால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பாப்பாங்குளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். காவிரி கூட்டு குடிநீர் முறையாக கிடைக்காததால் மக்கள் சிரமம் அடைந்தனர். உவர்நீரை நன்னீராக்கும் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாப்பாங்குளம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து ரூ.9.95 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் துவக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது. சுத்திகரிப்பு இயந்திரம் பழுதானதால் கடந்த சில மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். லாரிகளில் கொண்டு வரப்படும் தண்ணீரை குடம் ஒன்றுக்கு ரூ.10 கொடுத்து வாங்கி வருகின்றனர். பழுதை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து பாப்பாங்குளம் முனியசாமி கூறுகையில், ‘இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் உவர்நீரை நன்னீராக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிப்பு பணிகளை செய்யாததால் இயந்திரம் பழுதானது. இதனால் ரூ.9.95 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த திட்டம் பயனற்ற நிலையில் உள்ளது. அரசு பணமும் வீணடிக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

✍ கீழக்கரை: கீழக்கரையில் 21 குச்சி பகுதி மீனவர் குப்பத்தில் மாதக்கணக்கில் அகற்றாமல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதாரகேடு ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கீழக்கரை 21 குச்சி பகுதி மீனவர் குப்பத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட மினவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் அவ்வப்போது அகற்றுவதில்லை. இதனால் மாதக்கணக்கில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.மேலும் தற்போது டெங்கு, மலேரியா, போன்ற காய்ச்சல்கள் பரவி வரும் நிலையில் மலைபோல் குப்பைகள் தேங்கி கிடப்பது மக்களிடத்தில் நோய் பரவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, எனவே நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தேங்கிக்கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி இப்பகுதி மக்களின் சுகாதாரத்தை காக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மீனாள் என்பவர் கூறுகையில், ‘பலமுறை நகராட்சியில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதி மக்களுக்கு தொற்று நோய்கள் பரவுவதற்கு முன்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் அகற்றப்படாத குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

💢🌷 *NIP NEWS 24/7*🌷💢

✍ சென்னை : சென்னையில் மே 2ம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்களும் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் மரு.ரவீந்திரநாத் அறிவித்துள்ளார். மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 % இட ஒதுக்கீட்டை உறுதி செய்யக்கோரி இந்த போராட்டம் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

✍ சென்னை : சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் சொத்து மீட்புக்குழு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

💢🌷 *NIP NEWS 24/7*🌷💢

மதிய செய்திகள Reviewed by Manna Selvakumar on 01:21 Rating: 5
All Rights Reserved by சுரண்டை டைம்ஸ் ©
Designed by Theme in Box

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.