Top Ad unit 728 × 90

அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்

அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்...!!!*

தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வரும்  30-4-2017 (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது  தவணை *போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது,

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள்,  ரயில் நிலையங்கள், பேரூந்து நிலையங்கள் மற்றும் முக்கியமான  மையங்களில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சொட்டு மருந்து வழங்கும் மையம் *காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.*

நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் உங்கள்  உற்றார் - உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம்  சொல்லுங்கள் இந்த போலியோ முகாமில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும் அவசியம் "இரண்டு துளிகள் போலியோ சொட்டு மருந்தினை " கொடுக்க வேண்டும் என்று.

*போலியோ இல்லாத இந்தியாவை பாதுகாத்திட தவறாமல் "போலியோ சொட்டு மருந்தினை " கொடுக்கவும்.*

*குழந்தைகளே ஒரு நாட்டின் எதிர்காலம் - அவர்களின் மகிழ்ச்சியான எதிர்கால வாழ்க்கைக்கு கொடுப்பீர் இரண்டு சொட்டு " போலியோ சொட்டு மருந்தினை".*

ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தவறாமல் சொட்டு மருந்து கொடுத்து "போலியோ " என்னும் அரக்கனை ஒழிப்போம்.

போலியோ மீண்டும் வராமல் பாதுகாப்போம். போலியோ இல்லாத இந்தியாவை காத்திடுவோம் .

அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் Reviewed by Manna Selvakumar on 00:33 Rating: 5
All Rights Reserved by சுரண்டை டைம்ஸ் ©
Designed by Theme in Box

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.