Top Ad unit 728 × 90

சென்னை மெட்ரோ பணியில் அலட்சியம் : வீட்டில் கசிந்த ரசாயன கழிவு

*🔯💟🔯சென்னை மெட்ரோ பணியில் அலட்சியம் : வீட்டில் கசிந்த ரசாயன கழிவு!*☢

2⃣1⃣ 4⃣0⃣ 2⃣0⃣1⃣7⃣
*#ஏகா💥செய்திகள் 24/7:-*

சென்னையில் மெட்ரோ ரயில் பணியினால் வீடு ஒன்றில் இருந்து ரசாயன கழிவு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகளால் ஆங்காங்கே சாலைகளில் திடீர் பள்ளங்கள், வீடுகளில் விரிசல்கள் ஏற்படுவதோடு, ரசாயன கழிவுகளும் வெளியேறின. இதனிடையே பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில், இன்று காலை ரசாயன கழிவு வெளியேறியது. 

இது குறித்து வீட்டில் இருந்தவர்கள், மெட்ரோ அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த ஊழியர்கள், ரசாயன கழிவை வீட்டில் இருந்து வெளியேற்றி வருகின்றனர். இந்த பகுதியில் ரசாயன கழிவு இரண்டாது முறையாக வெளியேறியதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்

இந்த ரசாயன கழிவு வெளியேற்றம் குறித்து விளக்கமளித்துள்ள மெட்ரோ அதிகாரிகள், இடத்தின் உரிமையாளர் அங்கு ஆழ்துளை அமைக்கப்பட்டது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் தெரிவிக்கவில்லை என கூறியுள்ளனர். 

அதை தெரிவித்திருந்தால் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து பகல் நேரங்களில் மட்டுமே மெட்ரோ பணிகள் நடைபெறுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் மெட்ரோ பணியில் அலட்சியம் காட்டப்படுவதாக கூறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

சென்னை மெட்ரோ பணியில் அலட்சியம் : வீட்டில் கசிந்த ரசாயன கழிவு Reviewed by Manna Selvakumar on 17:43 Rating: 5
All Rights Reserved by சுரண்டை டைம்ஸ் ©
Designed by Theme in Box

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.