Top Ad unit 728 × 90

பிளஸ்-2 மாணவர் ஓட்டி வந்த கார் மோதி சாலை ஓரத்தில் தூங்கியவர் பலி

*🔯💟🔯பிளஸ்-2 மாணவர் ஓட்டி வந்த கார் மோதி சாலை ஓரத்தில் தூங்கியவர் பலி!☢*

டெல்லி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடிய கார் சாலை ஓரத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த நபர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
2⃣1⃣ 0⃣4⃣ 2⃣0⃣1⃣7⃣
*#ஏகா💥செய்திகள் 24/7-:*

டெல்லியின் வடக்கே காஷ்மீரே கேட் பகுதியில் உள்ள சாலையில் நேற்று அதிகாலையில் கார் ஒன்று மிக வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிக்கெட்டு ஓடிய கார் சாலை ஓரத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த நபர்கள் மீது ஏறி இறங்கியது.

இதில் கார் சக்கரத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் டெல்லியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்துவருகிறார் என்பதும், அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்பதும் தெரியவந்தது.

மேலும் அவருடன் காரில் மேலும் 2 மாணவர்கள் இருந்ததும், விபத்தை தொடர்ந்து அவர்கள் தப்பி ஓடியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அந்த மாணவரை கைது செய்த போலீசார் அவர் குடிபோதையில் காரை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்தினாரா என்பதை அறிய அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.   *🔵🔴ஏகா💥செய்திகள் 24/7(+919095720089)*

பிளஸ்-2 மாணவர் ஓட்டி வந்த கார் மோதி சாலை ஓரத்தில் தூங்கியவர் பலி Reviewed by Manna Selvakumar on 17:41 Rating: 5
All Rights Reserved by சுரண்டை டைம்ஸ் ©
Designed by Theme in Box

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.