Top Ad unit 728 × 90

கோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம் – ரூ.12,500 கோடி மாதாந்திர சீட்டு, உரிய பதிவுகள் இன்றி நடத்தியது கண்டுபிடிப்ப

*♨கோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம் – ரூ.12,500 கோடி மாதாந்திர சீட்டு, உரிய பதிவுகள் இன்றி நடத்தியது கண்டுபிடிப்பு♨*

🏳‍🌈கோகுலம் சிட் பண்ட் நிதி நிறுவனத்தில் உரிய கணக்குகள் இன்றி 12 ஆயிரத்தி 500 கோடி ரூபாய் வரை மாதாந்திர சீட்டு நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

🏳‍🌈சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு தென்னிந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோகுலம் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது.

🏳‍🌈தமிழகம், கர்நாடக, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வரும் அந்நிறுவனத்தின் 78 அலுவலகங்களில் 500க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் மத்தியப் படை பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

🏳‍🌈இன்று 2வது நாளாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம், டிரஸ்ட்புரத்தில் உள்ள கோகுலம் நிறுவன உரிமையாளர் கோபாலன் வீடு, அசோக் நகரில் உள்ள கோகுலம் பார்க் விடுதி என சென்னையில் மட்டுமே 36 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

🏳‍🌈அதேபோல், கேரளாவில் 29 இடங்கள், பெங்களூரில் 5 இடங்கள், கோவையில் 5 இடங்கள், புதுச்சேரியில் 2 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது.

🏳‍🌈கோகுலம் நிதி நிறுவனம் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரையிலான மாதாந்திர சீட்டு நடத்தி வருவதாகவும், அதற்கு உரிய கணக்குப் பதிவுகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.

🏳‍🌈இது தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோகுலம் சிட்பண்ட் நிதி நிறுவனம் – ரூ.12,500 கோடி மாதாந்திர சீட்டு, உரிய பதிவுகள் இன்றி நடத்தியது கண்டுபிடிப்ப Reviewed by Manna Selvakumar on 07:40 Rating: 5
All Rights Reserved by சுரண்டை டைம்ஸ் ©
Designed by Theme in Box

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.